நீங்கள் யூடியூப்-ல் பார்க்கும் எந்த வீடியோவும் Save ஆகக்கூடாது என நினைத்தால் Settings மாற்ற வேண்டும். அதன்படி, யூடியூப்-க்கு சென்று அதில் History என்பதை கிளிக்செய்ய வேண்டும். அதன்பின் அதில் Pause watch history என்பதை கிளிக் செய்து Pause என கொடுத்தீர்கள் எனில் நீங்கள் பார்க்கும் எந்த வீடியோவும் Save ஆகாது. நீங்கள் யூடியூப்-ல் படமோ (அ) வீடியோ பார்க்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.

அதில் சில பகுதி மட்டும் உங்களின் நண்பருக்கு Share செய்யவேண்டும் என நினைத்தால் இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துங்க. யூடியூப்-ல் எந்த வீடியோவை உங்களின் நண்பருக்கு ஷேர் செய்ய வேண்டுமோ அதை share செய்வதற்கு முன்னதாக லிங்கில் கடைசியாக time என நீங்கள் Send செய்யும் வீடியோவில் எந்த Timing-ல் இருந்து பார்க்க வேண்டுமோ அந்த நேரத்தை செட் செய்து அனுப்பவேண்டும்.