கோடை வெயிலின் தாக்கம் மனிதர்களை மட்டுமல்லாமல், தெருவில் திரியும் வாய் பேச முடியாத ஜீவன்களையும் கடுமையாக வாட்டி வதைத்து வரும் நிலையில், நாய்களுக்காகவே பிரத்யேகமாக ‘டாக் ஃபிரண்ட்லி ஐஸ்கிரீம்’ தயாரித்து வழங்கி வரும் ஒரு முதிய குல்பி வியாபாரியின் கருணை மனசு சோசியல் மீடியா உலகையே நெகிழ வைத்துள்ளது.
வழக்கமாக மனிதர்கள் சாப்பிடும் ஐஸ்கிரீம்களில் சேர்க்கப்படும் சர்க்கரை மற்றும் பால் பொருட்கள் நாய்களின் செரிமானத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், விலங்குகளின் ஆரோக்கியத்திற்கு உகந்த இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு இந்த ஐஸ்கிரீமை அவர் பிரத்யேகமாகத் தயாரித்துள்ளார்.
தாகத்தாலும் வெப்பத்தாலும் தவிக்கும் தெருநாய்களுக்குத் தனது சொந்தச் செலவில் இந்த ஐஸ்கிரீமை அவர் அன்போடு ஊட்டிவிடும் காட்சி காண்போரின் நெஞ்சைக் குளிர வைத்துள்ளது. சாதாரணக் குல்பி வியாபாரியான அந்தப் பெரியவர், தனது அன்றாட வியாபாரத்திற்கு இடையே தெருவில் ஆதரவற்றுச் சுற்றித் திரியும் நாய்களைக் கண்டதும், அவற்றுக்கெனத் தான் பிரத்யேகமாகப் தயாரித்து வைத்திருக்கும் ஐஸ்கிரீமை எடுத்து ஆசையோடு கொடுக்கிறார்.
அந்த நாய்களும் எவ்விதப் பயமுமின்றி அவரிடம் வந்து, அந்த ஐஸ்கிரீமை மிகுந்த மகிழ்ச்சியோடு நக்கிச் சாப்பிடும் அழகிய தருணங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மனிதநேயமும் ஜீவகாருண்யமும் நாளுக்கு நாள் குறைந்து வரும் இந்தக் காலத்தில், ஒரு சாமானியக் குல்பி வியாபாரி காட்டும் இந்த அளப்பரிய அன்பும் மனிதநேயமும் சமூக வலைதளவாசிகளின் இதயங்களை மொத்தமாக வென்றுள்ளது.
வாய் பேச முடியாத ஜீவன்களின் மீது உண்மையான அக்கறையும் அன்பும் கொண்ட இந்த முதியவரின் அசாத்தியமான முயற்சியைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் தங்களது நெகிழ்ச்சியான பாராட்டுக்களைக் மழை போல் பொழிந்து வருகின்றனர்.
மேலும் “வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்பதை விட, இந்த ஜீவன்களின் வயிற்றையும் மனதையும் குளிர வைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை” என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. சோசியல் மீடியா தளங்களில் காட்டுத்தீ போலப் பரவி வரும் இந்த அழகான செய்தி, பலருக்கும் விலங்குகள் மீதான அன்பையும் கருணையையும் விதைக்கும் ஒரு மிகச்சிறந்த பாடமாக உருவெடுத்துள்ளது.
See this Instagram video by @vikram_brewer_mittal https://t.co/6Wt8YtBX8t
“>
