Youtube பிரபலம் டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய தமிழக போக்குவரத்து துறை ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது. தினம்தோறும் அதிவேகமாக பைக் ஓட்டி வீடியோக்களை பதிவிட்டு வருவது தான் இவரது வழக்கம். இதனால் பல சிக்கல்களிலும் சிக்கியுள்ள இவர் சமீபத்தில் காஞ்சிபுரத்தில் வீலிங் செய்த போது விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மோட்டார் வாகன சட்டத்தின் படி பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய தமிழக போக்குவரத்து துறை ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது.