பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 பள்ளிக் கல்வி பாடத்தில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் என்ற பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி தொழில் நிறுவனங்களில் நேரடி களப்பயிற்சி  வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பிளஸ் ஒன், பிளஸ் டூ தொழிற்கல்வி மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களில் 20 நாட்களில் 80 மணி நேரம் நேரடி கள பயிற்சி வழங்க வேண்டும் பயிற்சி முடிவில் சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.

மேலும் மாணவர்களுக்கு உதவி தொகையும் உண்டு. அக்டோபர் 3 முதல் 20 வரை  பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், நவம்பர் 6 முதல் 23 வரை பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கும் களப்பயிற்சி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.