இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் காவலா  பாடலுக்கு தமன்னா செம குத்தாட்டம் போட்டிருப்பார்.

இதனைத்தொடர்ந்து ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடனமாடி வீடியோக்களை பதிவிட்டார்கள். அதேபோல பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி பலரும் ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் வீடியோ, யூடியூபில் 10 மில்லியன் (Real Time Views) பார்வைகளை கடந்தது சாதனை படைத்துள்ளது.