கேரளா மாநிலம் கண்ணூர் பழையங்காடி பகுதியில் உள்ள சாலையில் இளைஞர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது சைக்கிளின் நின்று கொண்டிருந்த சிறுமி ஒருவர் இளைஞர்களை நோக்கி வந்து பேசுகிறார். அப்போது அவர் சூயிங் கம் தொண்டையில் சிக்கியதாக கூறுகிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Manorama News (@manoramanews)

இதையடுத்து அந்த சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதனால் அங்கிருந்த இளைஞர்கள், சிறுமிக்கு முதலுதவி செய்து காப்பாற்றுகின்றனர். அதன் பின் சிறுமி சாதாரணமாக இருக்கிறார். இது தொடர்பான வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.