கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் கருப்பராயன் கோவில் வீதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மதன்குமார்(25) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான மதன் குமாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் கடுமையான தலைவலி மற்றும் கண்பார்வை மங்கி பார்வை குறைபாட்டால் சிரமப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததாலும், சரியான வேலை கிடைக்காததாலும், கண் பார்வை மங்கியதாலும் மன உளைச்சலில் மதன்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற மதன்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.