விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குருசாமி அதே பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் குருசாமியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் குருசாமிக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.