திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணப்படை வீடு பகுதியில் செல்லபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தாமிரபரணி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வேலையை விரித்துள்ளார். அந்த வலையில் மலைப்பாம்பு சிக்கியிருந்ததை கண்டு செல்ல பாண்டி அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் வலையில் சிக்கி இருந்த 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த மலைப்பாம்பு காட்டுப் பகுதியில் விடப்பட்டது.