திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் ஏராளமான சுற்றுலா பணிகள் குளித்து மகிழ்கின்றனர். கடந்த மாதம் 8- ஆம் தேதியிலிருந்து வன உயிரின கணக்கெடுப்பு பணி காரணமாக அகஸ்தியர் அருவி உள்ளிட்ட பாபநாசம் வனப்பகுதியில் இருக்கும் சுற்றுலா தலங்களுக்கு பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும் அகஸ்தியர் அருவியில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக குளிப்பதற்கு இடையே இருக்கும் தடுப்பு சுவர், தடுப்பு கம்பிகள் உள்ளிட்டவற்றை பராமரிக்கும் பணி நடைபெற்றுள்ளது. தற்போது பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதால் நாளை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.