அரியலூர் மாவட்டத்தில் உள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தில் அருளப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த எட்டாம் தேதி கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சலில் இருந்த அபிராமி பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிராமி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.