கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மையனூரில் ஜான்சி ராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஐந்து வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்ட ஜான்சி ராணியின் இடது காலில் பாதம் வளைந்து இருந்தது.

நேற்று முன்தினம் ஜான்சி ராணிக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வளைந்த கால் சரி செய்யப்பட்டது. தற்போது ஜான்சி ராணி நன்றாக இருக்கிறார். சிறப்பாக அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் சுரேஷ், சீனிவாசன் ஆகியோரை முதன்மை மருத்துவர் சாந்தகுமாரி பாராட்டியுள்ளார்.