ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள படியம்பாக்கம் காலனி பெரிய தெருவில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் லட்சுமி(38) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த லட்சுமி தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.