கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன குட்டியான் குப்பத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மாரியப்பன் வீட்டுப்பாடியில் இருந்து திடீரென வழுக்கி விழுந்தார். இதனால் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து வலி தாங்க முடியாமல் மாரியப்பன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மாரியப்பனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாரியப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.