திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணலிவிளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் சாமியாடி வந்தார். இந்நிலையில் தீராத நோயால் அவதிப்பட்ட ராஜா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.