தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தஞ்சாவூர் பெரிய கோவிலில் பீடம் 6 அடி உயரமும் 54 அடி சுற்றளவும், லிங்கம் 13 அடி உயரமும் 23 அடி சுற்றளவும் உடையது. இந்நிலையில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு 1500 கிலோ அரிசி சாதம் தயார் செய்யப்பட்டது.

இதனையடுத்து சாதம் பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டது. மேலும் 500 கிலோ காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற மகா தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.