திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளையில் பால்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் வரதராஜன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக குடல்வால் நோயால் வரதராஜன் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த வரதராஜன் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வரதராஜனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.