தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் 36 வயதுடைய பட்டதாரி பெண் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை அந்த பெண் தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய நபர் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறினார்.

இதனை நம்பி அந்த பெண் பல்வேறு தவணைகளாக 27 லட்சத்து 28 ஆயிரத்து 17 ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார். ஆனால் கூறியபடி அவருக்கு லாபம் கிடைக்கவில்லை. செலுத்திய பணமும் திரும்ப வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பெண் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.