திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுத்தமல்லி ராஜீவ் காந்தி நகரில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நவீன் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.

சம்பவம் நடைபெற்ற அன்று நவீன் குமார் கொண்டாநகரம் ரயில்வே கேட் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.