திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அருகே சங்கரி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என சங்கர் சிறுமியை மிரட்டியுள்ளார்.

இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.