சமூக வலைத்தளங்களில் ஒரு மர்மமான வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு பிரம்மாண்டமான கருப்பு நாகம் (Black Cobra) ஒன்று, தனதுப் படம் எடுத்த நிலையில், தீபங்கள் ஏற்றிய ஆர்த்தித் தட்டை (Aarti Plate) தனது உடலின் மேற்பகுதியால் பிடித்து, சிவன் சிலையின் (Lord Shiva Idol) முன் ஆர்த்தி செய்வது போலக் காட்சியளிக்கிறது.
இந்த வீடியோவைப் பார்க்கும் பலர், இது உண்மையான ‘தெய்வீக அற்புதம்’ நிகழ்வா அல்லது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (AI Technology) செயலா எனப் புரியாமல் குழப்பமடைந்துள்ளனர்.
View this post on Instagram
அந்த வீடியோவில், பாம்பு ஆர்த்தி செய்வதைக் காணும் பக்தர்கள் யாரும் அச்சப்படாமல், கைகளைக் கூப்பியபடி அமைதியாக நிற்கின்றனர். சிலர் மொபைலில் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
பின்னணியில் ஒரு குரல், “பதிவு செய்யுங்கள்! யாரும் இதை நம்ப மாட்டார்கள்” என்று கூறுவது கேட்கிறது. இயற்கையாக இதுபோன்றச் செயல்களைப் பாம்பு செய்ய வாய்ப்பில்லை என்பதால், இந்த அதிர்ச்சியளிக்கும் வீடியோ, சமீபத்திய ‘ஏஐ இமேஜிங்’ அல்லது வீடியோ உருவாக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று பலரும் கருதுகின்றனர்.
