சமூக வலைத்தளங்களில் வினோதமான மற்றும் திகிலூட்டும் வீடியோக்கள் பரவுவது வழக்கம். அந்த வகையில், ஒரு நபர் மிகவும் ஆபத்தான மற்றும் ராட்சத மலைப் பாம்பு ஒன்றை (Giant Python) கொஞ்சமும் அச்சமின்றித் தனதுத் தோளில் சுமந்துச் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தில், அந்த மலைப் பாம்பு இரண்டு முறை அந்த நபரைத் தாக்க முயன்ற போதிலும், அவர் அதனைச் சாமர்த்தியமாகக் கையாண்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Mike Holston (@therealtarzann)

வீடியோவின் தொடக்கத்தில், அந்த நபர் பாம்பின் வாலைப் பிடிக்க முயல்கிறார், ஆனால் மலைப் பாம்பு வேகமாகத் திரும்பி அவரைத் தாக்க முயல்கிறது. பார்வையாளர்கள் அனைவரும் அவர் விலகி விடுவார் என்று நினைத்தபோது, அந்த நபர் திடீரென மின்னல் வேகத்தில் பாம்பின் கழுத்தைப் பிடித்துத் தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.

சில வினாடிகளில், அந்தப் பாரம் மிகுந்த பாம்பைத் தனதுத் தோளில் போட்டுக்கொண்டு கம்பீரமாக நடந்து செல்கிறார். இறுதியாக, அந்தப் பாம்பு மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்கக் கூடாது என்பதற்காக, அவர் அதனைப் பாதுகாப்பாகக் கொண்டுபோய்க் குளத்தில் விட்டு விடுகிறார்.

“நாங்கள் பல்லியைப் பார்த்தாலே ஓடி விடுவோம், இவர் இவ்வளவு பெரிய பாம்பைத் தூக்கிக் கொண்டு திரிகிறார்” என்றும், “இவர் மனிதரா அல்லது பாம்புகளின் குருவா?” என்றும் பல இணையவாசிகள் ஆச்சரியத்துடனும் நகைச்சுவையுடனும் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.