கடந்த ஜனவரி 31ஆம் தேதி அன்று இந்தோனேஷியாவின் டுகோனோ எரிமலைக்கு எச்சா என்பவர் சென்றுள்ளார். அப்போது அவர் எரிமலையின் விளிம்பில் படுத்து கொண்டார். அதன் பின் அவர் தனது கையில் இருந்த செல்போனை எடுத்து தீ பிளம்புகள் வெடிக்க தயாராக இருக்கும் காட்சிகளை பதிவு செய்தார். அந்த தீர்ப்பிளம்புகள் மெதுவாக பொங்கி அதன் பின் பயங்கரமாக வெடித்தது. இந்த காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவாகி இருந்தன.

 

 

View this post on Instagram

 

A post shared by Newsner (@newsnercom)

இந்த வீடியோவை 4 மில்லியனுக்கு அதிகமானோர் பார்த்துள்ளனர். எரிமலை சாம்பல் மற்றும் எரிமலை குழம்புகள் வெடித்ததை அவர் தனது செல்போனில் பதிவு செய்தார். பின்னர் அத்துடன் ஒரு செல்பியையும் எடுத்துக் கொண்டார். இதுகுறித்து எச்சா கூறியதாவது எரிமலைக்கு அருகில் இருப்பது ஒரு நம்ப முடியாத அனுபவம். மகிழ்ச்சி மற்றும் பிரமிப்பு கலந்ததை உணர்கிறேன். வெப்பம், கர்ஜனை மற்றும் ஒளிரும் எரிமலையின் காட்சி அதையும் மறக்க முடியாத தருணமாக மாற்றியது என்று தெரிவித்துள்ளார்.