உலகளவில் மிகவும் கொந்தளிப்பான நீர் நிலைகளில் கருங்கடலும் ஒன்று. வலுவான நீரோட்டங்கள் மற்றும் கணிக்க முடியாத புயல்களால் வகைப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் தற்போது இணையதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒருவர் கருங் கடலுக்குள் குதிக்கிறார். அதன் பின் நீச்சல் அடித்துக்கொண்டு வெளியேற முயற்சி செய்கிறார்.
View this post on Instagram
ஆனால் கடுமையான அலை இருந்ததால் அவரால் வெளிவர முடியவில்லை. இதனால் மீண்டும் அவர் தண்ணீருக்குள் அடித்துச் செல்லப்பட்டார். அவர் மீண்டும் மீண்டும் கரைக்கு ஒதுங்க முயற்சி செய்யும்போது அலை அவரை அடித்துச் செல்லும் காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
