கரூர் நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசல் விபத்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் ஆந்திர துணை முதல்வர், நடிகர் பவன் கல்யாண் இருவரும் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அரசியல் கூட்டணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும், தனித்து தேர்தலில் போட்டியிடும் முடிவின் தாக்கம் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த உரையாடலின் போது, “தனித்து களம் இறங்கினால், ஆந்திரத்தில் சிரஞ்சீவிக்கு நடந்த நிலைமை தமிழ்நாட்டிலும் ஏற்படலாம். ஆனால், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்தால் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டு, துணை முதல்வராக பதவி ஏற்று மக்களுக்கு நன்மை செய்யலாம்.

அதன் பிறகு தனி பாதையைத் தேர்ந்தெடுத்தாலும் முதல்வராக முடிய வாய்ப்பு உண்டு,” என பவன் கல்யாண் ஆலோசனை வழங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சினிமா உலகில் வெற்றி பெற்ற பலர் அரசியலில் அந்தச் சாதனையை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த அனுபவத்தை முன்வைத்து பவன் கல்யாண் இந்த ஆலோசனையை தெரிவித்ததாகவும், இது விஜயின் அரசியல் பயணத்தை எதிர்கொள்ளும் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.