
அரவிந்த் கெஜ்ரிவால் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்து சம்பவத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தான் சொன்னதாக துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் பொழுது நீங்கள் மற்ற காங்கிரஸ் எதிர்ப்பு கட்சி தலைவர்கள் எல்லாம் அழைத்து, அவர்களுக்கு மாலை போட்டு…. அவர்களோடு மேடையில் ஐந்து நிமிடம், 10 நிமிடம் உட்கார வைத்தீர்கள் என்றால், எதிர்க்கட்சிகள் எல்லாம் அண்ணா ஹசாரே தலைமையில் அன்றைக்கு ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில்….
1977இல் ஒன்றாக வந்த மாதிரி வர முடியும் என்று சொன்னேன். இல்லை சார் அவர்கள் எல்லாம் எதிரில் வேண்டுமானால் உட்காரட்டும், அண்ணா ஹசாரே பக்கத்தில் உட்கார கூடாது என்று சொன்னார். அத்வானி போன்ற தலைவர்கள் எல்லாம் பப்ளிக் மீட்டிங்கில் உட்காருவது மாதிரி உட்கார வேண்டும். அவுங்க அண்ணா ஹசாரே பக்கத்தில் உட்கார கூடாது என்று சொன்னார். உடனே நான் சொன்னேன்…… சார் உங்களுக்கு அரசியலும் தெரியவில்லை, இதை நீங்கள் எப்படி கொண்டு போக போகிறீர்கள் என்றும் தெரியவில்லை….
காங்கிரசினுடைய ஊழலால் பெரிய ஊழல் எதிர்ப்பு இயக்கம் தயாராகிக் கொண்டிருக்கிறது. எதிர்பாராதவிதமாக அண்ணா ஹசாரே உங்கள் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறார். நீங்கள் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கப் போகுறீங்க என்று சொன்னேன். நான் அரசியலுக்கு மட்டும் நுழைய மாட்டேன். நீங்க எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம் என்று சொன்னார்.
அதை வச்சி பின்னாடி ஒரு அரசியல்…. அவர் கட்சி ஆரம்பிச்சதும் இந்தியன் எக்ஸ்பிரஸில் கட்டுரை கூட எழுதினேன். அவருடைய எண்ணங்கள் அப்போதே நேர்மையாக இல்லை. அதனால் அவர்கள் நேர்மையாக இருக்க முடியாது என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம் என பேசினார்.