செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  கிளம்பாக்கம் பஸ் நிலையத்தில் உதயசூரியன் சின்னம் வேண்டி கிடக்கு. தம்பி உதயநிதி கேக்குறாரு உங்க அப்பன் வீட்டுக்கு காசா?ன்னு….  இதுல   நான் கேட்கிறேன்,  இது உங்க அப்பன் வீட்டு காசா ? உங்க தாத்தா வீட்டுக் காசா ? எதுக்கு உங்க தாத்தா பெயரை வைக்குற…. எதுக்கு வைக்கிற ? இந்த நாட்டுல கருணாநிதியை  விட்டால்,  வேற தலைவரே கிடையாதா ?  எங்களுக்கு யாருமே கிடையாதா ? எழுதுனா அவர்தான்  எழுதினார், அதுக்கு ஒரு பேனா வைக்கணும்.

மருத்துவமனைக்கு முத்துலட்சுமி ரெட்டி பெயர் வைக்க முடியாதா ? முதல் முதலாக  படிச்சு மருத்துவரான பெண்மணி பெயர் வைக்க கூடாதா ? நூலகத்துக்கு என் தாத்தா பாண்டிதுரை  தேவர் பெயர் வைக்க கூடாதா ? நாலாம் தமிழ் சங்கம் அமைச்சு, தமிழ் வளர்த்தவன் பெயரை  வைக்க கூடாதா ?  ஜல்லிக்கட்டுக்கு நான் கேலரி கேட்டேனா….  ஜல்லிக்கட்டு வரும்போது ஒரு கட்டையை கட்டி,  ஓட விட்டுட்டுட்டு கழட்டிட்டு போயிருவோம். 

அதுக்கு எதுக்கு அவ்வளவு கோடியில் செலவு ? அந்த கட்டடமா ? அதுக்கும் உங்க அப்பா பெயரா ? என்ன இது….  எதுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்துக்கொண்டு,  தூக்கிட்டு….  கருணாநிதி நாடு கேட்டேன் என்றால்,  செருப்பு கழட்டி அடி. வச்சிட்டு போ…. 400 கோடி செலவு செஞ்சீங்க. அந்த மதில் சுவரை எதுக்கு இடிக்கிறீங்க ?  உதயசூரியன் சின்னம் எதுக்கு ? அதிமுக முடிச்சிருந்தா, ஏன்  ரெட்டை இலை சின்னம் வைக்கணுமா ? உங்க காசா உங்க கட்சி காசா ? 

ஏன் காசு, மக்களோட வரி காசு…  அதுல என்ன உன் கட்சி சின்னத்தை வைக்கிறது ? 40 கிலோ மீட்டருக்கு அங்கு போய் எதற்கு பேருந்து நிலையம் ? நான் சென்னைக்கு வரதுக்கு முன்னாடி 40 கிலோமீட்டருக்கு அங்கே புறநகரில் நிறுத்திவிடுகின்றாய். பிறகு அங்கே  இருந்து 40 கிலோமீட்டர் எப்படி வருவது ? இதெல்லாம் எதுக்கு ? மாநகர பேருந்து… இவ்வளவு தொலைநோக்கு இருக்கிறவன்,  நீர் எங்க தேங்கும் ? நீர் தேக்கத்தை ஆக்கிரமிக்கலாமா ?

நீர் தேக்கத்தை குப்பை மேடாக ஆக்கலாமான்னு தெரியல ? பள்ளிக்கரணை ஏறில குப்பை கொட்டன்னு அதீமேதை யாரு ? அந்த அதீமேதை யாரு? இந்த இரண்டு ஆட்சியில் எவன் கொட்டினான்? கடல் நீர் மட்டத்துக்கு சரியா இருக்கிற ஒரு இயற்கையின் அருங்கொடை பள்ளிக்கரணை ஏறி. அதுல குப்பைமேடு ஆக்குற அறிவு உனக்கு யார் கொடுத்தது ? இதுதான் தொலைநோக்கா ? 5000 ஏக்கர்ல ஏர்போர்ட்,  அது எதிர்காலத்துக்கு…..  அவ்வளவு எதிர்காலத்தை சிந்திக்கிறவுங்களா இவுங்க என விமர்சனம் செய்தார்.