செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், எனக்கும் திருமதி கௌதமி அவர்கள் மீது அதீதமான அன்பு, பாசம், மரியாதை உண்டு. அவர்கள் கட்சியில் கடந்த சில வருடங்களாக தீவிரமாக உழைக்கக்கூடிய ஒரு பெண்மணி. எந்த அளவிற்கு அவர்கள் கட்சியை நேசித்தார்கள் என்று எனக்கும் தெரியும். அதனால் எனக்கும் அந்த கடிதத்தை பார்த்தவுடனே கடுமையான மன வேதனை இருக்கு.

அவர்களுக்கு மகளிர் அணி இணைந்து பணியாற்றுவதற்கு கூட நான் மூன்று வருடத்திற்கு முன்னால் கேட்டிருந்தேன். எங்களுடன் சேர்ந்து தேசிய அளவில் பணியாற்றனும்.  அதற்காக பொறுப்புகள் அவங்க கேட்டபோது இல்லை நான் மாநிலத்தில் வேலை பண்றேன் அப்படின்னு சொல்லி இருந்தாங்க. அதற்கு பின்பாக மாநில நிர்வாகிகள் அடிக்கடி அவங்கள பார்க்கிறதும்,  அவங்களே ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு வந்துட்டு போனதும் இருக்கு.

எனக்கு இப்போ மாநில வேலை நேரம் குறைந்ததாலும்..  அதிகமா அவங்களோட பழகுறதுக்கோ, பேசுவதற்கோ,  பார்க்கிறதுக்கோ  நேரமில்லாம இருந்தது. ஆனாலும் கடந்த மாதம் கூட போன்ல பேசினேன்.  எப்படி இருக்கீங்க ? உடம்பு  நல்லா இருக்கா? என பேசுனேன். தேர்தல் பரப்புரையில்லை.

அதற்கு முன்பாக கூட பல நிகழ்ச்சிகளுக்கு நான் கூட்டபோது வந்திருக்காங்க. தான் ஒரு சினிமா ஸ்டார். எங்க போனாலும் தனக்கு முக்கியத்துவம் அப்படின்னு ஒருபோதும் அவர்கள் யோசித்தது இல்லை. அந்த அளவுக்கு ஒரு அற்புதமான கட்சியினுடைய ஒரு அடிப்படை தொண்டர் மாதிரி வேலை பண்ணக்கூடியவங்க. எனக்குமே அந்த கடிதம் ரொம்ப மனவேதனை கொடுத்து இருக்கு என தெரிவித்தார்.