தற்போது சமூக வலைதளத்தில் ஒரு விசித்திரமான வீடியோ ஒன்று பரவி வருகிறது. வழக்கமாக, நாய்களை வளர்க்கும் மக்கள், அவைகளை வீட்டில் விட்டுவிட்டு வெளியே போக முடியாம மாலுக்கு கூட கூட்டிச் செல்வது சாதாரணம் தான். ஆனா இங்கே ஒரு நபர், டைப்பர் போட்ட ஆட்டுக் குட்டியைக் மாலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by 𝕊𝕂ℂ 𝕀ℕ𝔽𝕆ℝ𝕄𝔸𝕋𝕀𝕍𝔼 (@135sapan135)

இது பார்ப்பவர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், சிரிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. வீடியோவில் அந்த நபர் மாலில் நடக்க, பின்னால் அழகான ஆடையுடன் ஆட்டுக்குட்டி நடக்குது. அப்படியே உள்ளே வரும்போது, ஒரு பெண்ணின் நாய் அதை பார்த்து குரைக்க ஆரம்பிக்கிறது.

அதன் பிறகு, எஸ்கலேட்டருக்கு வந்த அந்த ஆட்டுக்குட்டி, முதலில் தயங்கினாலும், அதன் பின் தைரியமாக எஸ்கலேட்டரில் ஏறி மேல சென்று தனது உரிமையாளரிடம் சேர்ந்தது. இதைப்பார்த்த மக்கள், “இது நிஜமா?”னு சிரிப்போட பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் ‘135sapan135’ என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகள், 46 ஆயிரம் லைக்குகள் மற்றும் கணக்கிலடங்காத நகைச்சுவையான கருத்துகள் குவிந்துள்ளன. “அண்ணே, ஆட்டுக்குட்டி சாப்பிங்கா?”, “நாளை என் எருமைய கூட மாலுக்கு கூட்டிட்டு வர்றேன்!”. “இந்த சீசன்ல இதான் சூப்பர் காமெடி வீடியோ!”ன்னு நெட்டிசன்கள் கமெண்ட் செய்து கலக்கி வருகின்றனர்.