சிலர் சாகசப் பிரியர்களாக இருந்து, பார்ப்பவர்களை மூச்சுத் திணற வைக்கும் அபாயகரமானச் செயல்களைச் செய்வார்கள். அந்த வகையில், ரஷ்யாவைச் சேர்ந்த இரு விளையாட்டு வீரர்கள், தரையில் இருந்து 5,900 அடி (1,800 மீட்டர்) உயரத்தில் வானத்தில் கால்பந்து விளையாடி புதிய உலகச் சாதனையை (World Record)ப் படைத்துள்ளனர்.
இந்த ஆச்சரியமானச் சாகசத்தில், ஒரு ஹாட் ஏர் பலூனில் (Hot Air Balloon) சிறிய கால்பந்து மைதானம் போன்றதொரு அமைப்புக் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது.
View this post on Instagram
அதன் மீது ஏறி, வீரர்கள் எந்தப் பயமும் இல்லாமல் உற்சாகமாகக் கால்பந்து விளையாடியுள்ளனர். ரஷ்யாவின் சாகச வீரர் செர்ஜி பொய்ட்ஸோவ் (Sergey Boytcov) என்பவரின் தலைமையில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்த அதிரடியான வீடியோ இதுவரை 5.3 கோடிக்கும் அதிகமானப் பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. இவ்வளவு உயரத்தில் இருந்துப் பந்து கீழே விழுந்தால் என்ன ஆகும் என்றுப் பலரும் வேடிக்கையாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
