உலகின் மிகவும் விலை உயர்ந்த முட்டை என்று அழைக்கப்படும் ‘விண்டர் எக்’ (Winter Egg), அண்மையில் நடந்த ஏலத்தில் 30.2 மில்லியன் டாலருக்கு (சுமார் ₹273 கோடி) விற்கப்பட்டுப் புதிய உலக சாதனைப் படைத்துள்ளது. இந்த முட்டையின் விலையில், சுமார் 100-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களை வாங்க முடியும்!
ரஷ்யாவின் பிரபல நகைக்கலைஞர் ஃபேபர்கே (Fabergé) என்பவரால் 1913-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ‘கிரிஸ்டல் ஃபேபர்கே முட்டை’ (Crystal Fabergé Egg), உருகும் பனிக்கட்டியைப் போலக் காட்சியளிக்கிறது.
🚨 JUST IN
One of the rarest moments in history
A Fabergé Egg will be put up for sale at auction
On December 2nd at Christie’s
A breathtaking 1913 masterpiece valued at around $27 million
A storm of diamonds, platinum, rock crystal, quartz, nephrite, and gold
Breathtaking! https://t.co/0oSc1r6I40 pic.twitter.com/hIpnJgoPif
— Mambo Italiano (@mamboitaliano__) November 4, 2025
இது சுமார் 4,500 சிறிய வைரங்கள் பதிக்கப்பட்டு, உள்ளேப் பூக்களால் நிரம்பிய ஒரு கூடையும் கொண்டுள்ளது. இந்த முட்டையை ரஷ்யாவின் ஜார் இரண்டாம் நிக்கோலஸ் (Czar Nicholas II), ஈஸ்டர் பரிசாகத் தனதுத் தாயாருக்கு அளித்தார்.
ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு காணாமல் போன இந்த முட்டை, 1990-களில் மீண்டும் வெளியானது. கலை மற்றும் வரலாற்றின் மதிப்பிற்கு எந்தப் பணமும் ஈடாகாது என்பதை இந்த முட்டை மீண்டும் நிரூபித்துள்ளது.
