மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்ச்சி நான்கு நாட்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டும். உங்களுக்கு தெரியும்…  தென் மாவட்டங்களில் ஏற்பட்ட  பெரு வெள்ளம். இயற்கை பேரிடர் நான்கு மாவட்டங்களை புரட்டி போட்டுள்ளது.  நான் மற்ற அமைச்சர்கள் எல்லாம் அங்கு சென்று மீட்பு பணிகள்,  நிவாரண பணிகளில் எல்லாம் ஈடுபட்டதால்,

நேற்று மாலை தான் அந்த பணிகள் எல்லாம் முடித்துவிட்டு நான் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டுள்ளேன். நான்கு நாட்கள் தள்ளி இந்த நிகழ்ச்சி நடந்தாலும்,  மிகச் சிறப்பாக இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. பொருளாதார சுதந்திரமே உண்மையான பெண் விடுதலைக்கு அடித்தளம். இதனை உணர்ந்து எப்பொழுதெல்லாம் கழக ஆட்சி அமைகிறதோ,  அப்பொழுதெல்லாம் நம்முடைய திராவிட மாடல் அரசு மகளிர் மேம்பாட்டுக்கான திட்டங்களை தொடர்ந்து தந்து வருகிறது.

வீட்டுக்குள் முடங்கி இருந்த பெண்களை வகுப்பறைக்கு கொண்டு வந்தது திராவிட இயக்கம். அதேபோல வாக்குரிமை, ஓட்டுரிமை நூறாண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது. அந்த வாக்குரிமையை பெற்று தந்தது திராவிட இயக்கத்துடைய தொடக்க புள்ளியான நீதிக்கட்சி. பெண் விடுதலையை பெண்கள் இடத்திலிருந்து யோசித்தவர் என்றால் அது நம்முடைய தலைவர்கள் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களும், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் என்பதை நீங்கள் அறிவீர்கள்…

அதனால் தான் பெரியார் அவர்கள் பெண்களுக்கு கலாச்சாரம் என்ற பெயரிலும்,   சமூகம் என்ற பெயரிலும்,  சட்டம் என்ற பெயரில் இருந்த தடைகள் என்னவென்று சொன்னார்கள்?  அந்த மூன்று தடைகளும் உடைபட வேண்டும் என்றால் பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்று போராடியவர் தான் தந்தை பெரியார் அவர்கள்….  அதேபோல்  பேரறிஞ்சர்  அண்ணா அவர்கள்,  முதல் முறையாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம்  ஆட்சி அமைத்த போது தான் ஆணுக்கு,  பெண் சமம்.  நிகர் என்பதை  உணர்த்த சுயமரியாதை திருமணங்களை சட்டபூர்வமாக்கினர் நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்கள்…

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நாட்டிலேயே முதல்முறையாக பெண்களுக்கு சொத்தில்  சம உரிமை அறிவித்தார்,  சட்டத்தை கொண்டு வந்தவர் நம்முடைய முத்தமிழ் அறிஞ்ர் டாக்டர் கலைஞர் அவர்கள்….  அதே போல கட்டணம் இல்லாத கல்வி… உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு என மகளிருக்கு கலைஞர் தந்த திட்டங்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம். அதே போல முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழிவந்த நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்….  இன்றைக்கு நாடே போற்றுகின்ற வகையில்,  கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்தி வருகிறார்கள். ஒரு  ஒரு மாதத்திற்கும் கிட்டத்தட்ட 1 கோடியே 14 லட்சம் மகளிர் மாதம் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை  பெற்று வருகின்றார்கள்.

அதேபோல இந்தியாவிலே முதல்முறையாக தேர்தல் அறிக்கையிலே சொன்ன வாக்குறுதி….  மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி திட்டத்தை அறிமுகப்படுத்திய வரும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தான்….  இப்பொழுது அந்தத் திட்டத்தை பல மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன…  அதேபோல பெண் கல்விக்கு புதுமைப்பெண் திட்டம் என்று….  அரசு பள்ளியில் படித்து,  உயர் கல்வி படிக்க எந்த கல்லூரிக்கு போய் படித்தாலும்…..  அவர்களின் வங்கிக்கணக்கில் கல்வி ஊக்கத் தொகையாக புதுமைப்பெண் திட்டம் அப்படின்னு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.