புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த 27ஆம் ஆண்டு தொடக்க முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும், புதிய தமிழகம் கட்சியின்  மாநில இளைஞர் அணி தலைவருமான ஷ்யாம் கிருஷ்ணசாமி,  இன்னைக்கு நாம் மது விலக்கே இலக்கு என்ற ஒரு உன்னத கோரிக்கையோடு ஒரு மாநாடாக  திரண்டு இருக்கிறோம். பல பேர் யோசிக்கலாம்…  டாக்டர் ஐயா முப்பது வருஷமா மதுவிலக்கு,  சாராயம் குடிக்காத…. குடிக்காதான்னு சொல்லிட்டு இருக்காரு….

அதுவும் குறிப்பா இந்த ஒரு வருஷமா எண்ணற்ற  போராட்டங்கள்…. டாஸ்மார்க் எதிராக…  டாஸ்மார்க் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதத்தில் ஆயிரக்கணக்கானோர் போய் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்றோம்.  அங்க போய் ஒரு லட்சம் கோடி ஊழலை வெளிப்படுத்தினோம். அப்போது தான்  தமிழ்நாட்டிற்கு இப்படி ஒரு ஊழல் நடந்தது தெரியும்.

அதை தொடர்ந்து போராட்டங்கள் நடத்திட்டே  இருந்தோம்… நம் செந்தில் பாலாஜி தாங்க முடியாமல் டாக்டர்கள் ஐயா மேல மானநஷ்டஈடு வழக்கு கூட கொடுத்து பார்த்தான். கொடுத்த அடுத்த நாளே  நெஞ்சுவலி வந்து தூக்கிட்டு போய் ஜெயில்ல வச்சுட்டாங்க….  இன்னைக்கு வர வெளிய வரல… ஏன் இத்தனை போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறோம் ? அதை நாம யோசிச்சு பார்த்தல் தான் தெரியும்… இனிமேலும் நம்மை  வெளியே இருந்து அடிக்க முடியாது.

வெளியே இருந்து அடிச்சா, நாம அடிக்க அடிக்க மேலே எந்திரிப்போம்… அதுக்கு நம்ம டாக்டர் ஐயாக்கு ட்ரைனிங் கொடுத்துடாரு. இனிமே வெளியே இருந்து அடிச்சா இவுங்க   அரசியலா வருவாங்க. இவங்க திருப்பி அடிப்பாங்க…  தேவையில்லாம   பிரச்சினையை  நம்மளே வேட்டி குள்ள எடுத்து விட்ட மாதிரி ஆயிரும் என்று நினைத்து தான், நம்மை உள்ளுக்குள்ளே இருந்து கரையானை போல இந்த சமூகத்தை கரைக்க வேண்டும்  என நினைச்சு, அவுங்களோட   முதல் ஆயுதமே மது என பேசினார்.