மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்தியாவிலே முதல்முறையாக தேர்தல் அறிக்கையிலே சொன்ன வாக்குறுதி….  மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி திட்டத்தை அறிமுகப்படுத்திய வரும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தான்….  இப்பொழுது அந்தத் திட்டத்தை பல மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன…

அதேபோல பெண் கல்விக்கு புதுமைப்பெண் திட்டம் என்று….  அரசு பள்ளியில் படித்து,  உயர் கல்வி படிக்க எந்த கல்லூரிக்கு போய் படித்தாலும்…..  அவர்களின் வங்கிக்கணக்கில் கல்வி ஊக்கத் தொகையாக புதுமைப்பெண் திட்டம் அப்படின்னு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.

மகளிருக்கு பெரிதும் உதவுகின்ற இன்னொரு திட்டம்…  உங்களுக்கு தெரியும்… முன்னாடியெல்லாம் வேலை செய்யும் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டு சோகமாக இருப்பார்கள்..

காலையில் 8:00 மணிக்கு எல்லாம் கிளம்பி போயிடணும்…  பள்ளிக்கூடத்திற்கு சென்ற பையன் சாப்டானா ?  பசியோடு இருப்பானா என்று பெற்றோர்கள் யோசித்துக் கொண்டே இருப்பார்கள்… ஆனால் இப்பொழுது நம்முடைய அரசு…  ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் காலை இலவச உணவு திட்டம் ”முதலமைச்சருடைய காலை உணவு திட்டம்”

இப்பொழுது அனைத்து பெற்றோர்களும்,  தாய்மார்களும் தைரியமாக தங்களுடைய குழந்தைகளை…..  சந்தோஷமாக மகிழ்ச்சியாக பள்ளிக்கூடத்திற்கு அனுப்புகிறார்கள். இப்படி பல்வேறு திட்டங்களை நம்முடைய முதல் அமைச்சர் அவர்கள் தந்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.