கிறிஸ்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான,  எடப்பாடி பழனிச்சாமி,  திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்துவேன் என வாக்குறுதி அளித்தார்கள். இதுவரை இது அமல்படுத்தவில்லை. சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மட்டுமல்ல… அரசு ஊழியர்களும் ஏமாற்றப்பட்டு இருக்கின்றார்கள்.

தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்க வேண்டும் என்று கடந்த காலத்தில் திமுக பிஜேபி கட்சியுடன்  கூட்டணி வைத்தது. 1999இல் நாடாளுமன்ற தேர்தல் அவர்கள் வெற்றி பெற்று,  பாரதிய ஜனதா மத்தியிலே ஆட்சி அமைத்தது. அந்த அமைச்சரவையிலே திமுக அமைச்சர்கள் அங்கம் பெற்றார்கள். அதுவும் முக்கிய இலாகாவை  பெற்று அமைச்சராக இருந்தார்கள்.

குறிப்பாக ஒருவர்  உடல்நிலை சரியில்லாமல் ஒரு வருடம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இலாக இல்லாத அமைச்சராக கொடுத்து,  அதையும் அனுபவித்தவர் தான் இந்த திமுக கட்சியை சார்ந்த நபர்கள். கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் இருந்தவரை பிஜேபியின் கொள்கைகள் திமுகவிற்கு தெரியாதா ?  பதவி சுகம் வேண்டும் என்றால் கொள்கை காற்றிலே பறக்கவிட  வேண்டும் என்று தான் திமுககாரர்கள்,  திமுக தலைவர்கள்…. கடந்த காலத்தில் பிஜேபி கட்சியுடன் திமுக ஒட்டி உறவாடி பதவி சுகத்தை அனுபவித்ததை மக்கள் மறந்து விடுவார்கள் என எண்ணி பசுந்தோள் போர்த்திய புலியாக வலம் வந்து, 

சிறுபான்மையின மக்களை ஏமாற்றும் தந்திரமான  திமுகவின் சுயரூபத்தை இப்பொழுது கிறிஸ்தவ பெருமக்கள் புரிந்து கொண்டார்கள்,  விழித்துக் கொண்டார்கள். இனி பிழைத்துக் கொள்வார்கள் என்று நான் நினைக்கின்றேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மதத்திற்கும்,  சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி. அனைத்து மக்களையும் துணையாக சமமாக மதிக்க கூடிய இயக்கம்.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மதம் அவரவர் வைக்கின்ற மதம் புனிதமானது. அதை யாரும் குறுக்கிடுவதற்கு  உரிமை கிடையாது என தெரிவித்தார்.