திருநெல்வேலி மாவட்டத்தில் தாளையத்துப் பகுதியில் வசித்து வருபவர் முகமது மீரான். இவருக்கு முகமது சர்ஜின் (30) என்ற மகன் உள்ளார். முகமது மீரான் அதிமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட நிர்வாகியாக உள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுண், பாறையடி உள்ளிட்ட மூன்று பகுதிகளில் தண்ணீர் விநியோகம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் வேலைகளை முகமது மீரான் மற்றும் அவரது மகனும் கவனித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பாரையடி பகுதியில் உள்ள நிறுவனத்தில் பணிபுரியும் திருமணம் ஆன பெண்ணிடம் முகமது சர்ஜின் தவறான முறையில் நடந்துள்ளார்.

இது குறித்து நிறுவனத்தின் முதலாளியான முகமது மீரான் இடம் அந்த அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். அதனால் அவர் முகமது சர்ஜ்ஜினை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் முகமது சர்ஜின் ஆத்திரத்தில் அந்தப் பெண்ணை தனது நிறுவனத்திற்கு வரவழைத்து அடித்து, துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த அந்த பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

அங்கு காவல்துறை விசாரணையில் தன்னை தனது நிறுவனத்தின் முதலாளியான முகம்மது மீரானின் மகன் முகமது சர்ஜின் சிகரட்டால் சூடு வைத்து கொடுமைப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பிஎன்எஸ் 68 கீழ் மற்றும் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் அதிமுக பிரமுகரான முகமது மீரானின் மகன் முகமது சர்ஜினை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதிமுக பிரமுகரின் மகன் திருமணமான பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.