ரயிலில் பயணம் செய்வது எப்போதும் ஒரு சுவாரசியமான அனுபவம், ஆனால் ஒரு பெண் நள்ளிரவில் ஒட்டுமொத்தப் பெட்டியிலும் தனி ஆளாகப் பயணம் செய்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு திகிலூட்டும் மற்றும் ஆச்சரியமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடையாளம் தெரியாத அந்தப் பெண், இரவு 2 மணி அளவில் ரயிலில் பயணம் செய்தபோது, அவர் அமர்ந்திருந்த பெட்டி (Coach) முழுவதும் காலியாக இருந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sonu Kumar Raj (@sonukumarraj07)

பொதுவாகப் பிசியாக இருக்கும் இந்திய ரயில்களில் இது மிகவும் அபூர்வமான ஒன்று. அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், அருகில் இருந்த மற்ற பெட்டிகளிலும் சென்று பார்த்துள்ளார்.

அங்கும் ஒரு பயணி கூட இல்லை! நள்ளிரவு நேரத்தில், ஆள் நடமாட்டமே இல்லாத அந்த ரயிலில் தனி ஒரு பெண்ணாக அவர் அமர்ந்திருக்கும் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இது பயணமா அல்லது பேய் படக் காட்சியா?” என கமெண்ட் செய்து வருகின்றனர். ரயில்வே துறையின் இந்தத் தனிப்பட்ட ‘விஐபி’ அனுபவம் குறித்து அந்தப் பெண் வியப்புடன் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.