ஒரு தந்தை தன் மகளுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்வார் என்பதற்கு உதாரணமாக மாறியுள்ளார் ஆட்டோ ஓட்டுநர் ராகேஷ் ஜாதவ். ராகேஷின் மனைவி காலமான பிறகு, தனது சிறிய பெண் குழந்தையைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லாத சூழலில், அவர் ஒரு நெகிழ்ச்சியான முடிவை எடுத்துள்ளார். தினமும் ஆட்டோ ஓட்டச் செல்லும் போது, தனது மகளையும் டிரைவர் சீட்டில் தன்னுடன் அமர வைத்தே ஆட்டோ ஓட்டுகிறார்.

“ஏன் குழந்தையை இப்படி அழைத்துச் செல்கிறீர்கள்?” என்று கேட்டால், “எனக்கு இவளைத் தவிர யாரும் இல்லை, இவளைப் பார்த்துக் கொள்ளவும் ஆள் இல்லை. அதனால் தான் என்னுடனேயே வைத்திருக்கிறேன்” என்று கண்கலங்கக் கூறுகிறார் ராகேஷ்.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

வறுமையும் கஷ்டமும் ஒரு பக்கம் வாட்டினாலும், தனது மகளைப் பெரிய வழக்கறிஞராக (Lawyer) ஆக்க வேண்டும் என்பதே இந்த ஒற்றைத் தந்தையின் லட்சியமாக உள்ளது.

இந்த நெகிழ்ச்சியான வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் நிலையில், “வறுமையிலும் தன் மகளின் எதிர்காலத்திற்காகப் போராடும் நிஜமான ஹீரோ” என்று மக்கள் ராகேஷுக்கு பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.