ரயில் நிலையங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் வேளையில், கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒரு பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரயில் நிலையம் ஒன்றில் வேகம் குறைந்து மெதுவாக வந்து கொண்டிருந்த ரயிலுக்குள், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென ஒரு சிங்கம் பாய்ந்து ஏறியுள்ளது.
ரயிலுக்குள் நுழைந்த அந்தச் சிங்கம், அங்கிருந்த ஒரு பெண்ணையும் அவரது குழந்தையையும் கண் இமைக்கும் நேரத்தில் கவ்விப்பிடித்து வெளியே இழுத்துச் சென்றது.
View this post on Instagram
இந்த வீடியோவைப் பார்ப்பவர்களின் ரத்தம் உறையும் வகையில் அந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. பாதுகாப்பான பயணத்திற்காகக் காத்திருந்த இடத்தில், வனவிலங்கு ஒன்று ரயிலுக்குள் புகுந்து தாயையும் சேயையும் வேட்டையாடிய இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் நடமாடும் பகுதிகளில் வனவிலங்குகள் புகுவது குறித்துப் பலரும் தங்களது அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
