பெற்ற மகளேத் தன் தாயை முதியோர் இல்லத்தின் வாசலில் தவிக்கவிட்டுச் செல்லும் இதயத்தை ரணமாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி, பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்கி வருகிறது.
அந்த வீடியோவில், வயதான ஒரு தாயைத் தள்ளாத வயதில் முதியோர் இல்லத்திற்கு அவரது மகளே அழைத்து வருகிறார். “வீட்டில் இடமில்லை” என்ற ஒற்றைக் காரணத்தைச் சொல்லி, அந்தத் தாயின் கண்ணீரையும் பொருட்படுத்தாமல் அவரை அங்கேயே விட்டுவிட்டுச் செல்ல முனைகிறார்.
🚨जब बेटी ही मां को वृद्ध आश्रम छोड़ने जाए बेशर्मी से बोले भी कि मां के लिए घर में जगह नहीं
सोचिए : कभी गांव से किसी को नहीं सुना कि वृद्ध आश्रम छोड़ने गया सिर्फ शहरों में ये परिपाटी है
मां बाप शहर में बच्चों के लिए शिफ्ट होते है ,यही बच्चे मां बाप को बाद में वृद्ध आश्रम… pic.twitter.com/p1Wi50Ad3Q
— Ramesh Tiwari (@rameshofficial0) January 5, 2026
தன் பாசத்திற்குரிய மகள் தன்னைப் பிரிந்து செல்வதைத் தாங்க முடியாமல், அந்தத் தாய் அழுதுகொண்டே கதறும் காட்சிகள் காண்போரைக் கலங்கச் செய்கிறது.
ஆனால், அந்த மகளோ எந்தவித ஈவுஇரக்கமும் இன்றி, தன் தாயின் கண்ணீரைத் துடைக்கக் கூட முற்படாமல் அங்கிருந்து விலகிச் செல்கிறார். “பெற்ற மனமோ பித்து, பிள்ளை மனமோ கல்” என்ற பழமொழிக்கு ஏற்ப, பாராமுகமாகச் செல்லும் அந்த மகளின் செயல் நெட்டிசன்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
