தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நீண்ட வருடங்களுக்கு பிறகு திரிஷா படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்துவதற்கு லியோ பட குழு விமான மூலம் அங்கு சென்றது. அதில் விஜய்யுடன் திரிஷாவும் சென்றிருந்தார்.

ஆனால் தற்போது காஷ்மீரில் இருந்து திரிஷா புறப்பட்டு சென்னை வந்து விட்டதாகவும் மேலும் லியோ திரைப்படத்தில் இருந்து திரிஷா விலகியதாகவும் செய்திகள் இணையத்தில் பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திரிஷா தனது சமூக வலைதளங்களில் விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். அது மட்டுமன்றி காஷ்மீரில் அதிகம் குளிர் இருப்பதால் விஷால் தனது காட்சியை படபிடிப்பு நடத்தும் போது மட்டும் கலந்து கொள்ளலாம் என்ற முடிவில் அங்கிருந்து புறப்பட்டதாக அவர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.