நடிகை ஹன்சிகா தனது நீண்ட நாள் நண்பரான சோகைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வரும் சூழலில் இவரின் கைவசம் ஏழு படங்கள் வைத்துள்ளார். ஹன்சிகாவின் திருமண வீடியோ விரைவில் டிஸ்னி ஹாட் ஸ்டார் இல் வெளியிட இருக்கின்றது.

அதன் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் ஹன்சிகா தனது முன்னாள் காதலர் பற்றி கண்கலங்கி பேசியிருப்பது வைரலாகி வருகிறது. நான் அவரை (சிம்பு) காதலித்தது எல்லோருக்கும் தெரிந்த சூழலில் அது மீண்டும் நடக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். வெளிப்படையாக அறிவிப்பது என்றால் அவர் நான் திருமணம் செய்து கொள்ளும் நபராக இருக்க வேண்டும் என ஹன்சிகா தெரிவித்திருக்கிறார்.