நீலகிரி மாவட்டத்திலுள்ள நாடுகானி பொன்னூர் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விறகு சேகரிப்பதற்காக தேவாலய பகுதிக்கு சென்றார். மீண்டும் ராமமூர்த்தி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் வனத்துறையினர் ராமமூர்த்தியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் ராமமூர்த்தி சடலமாக கிடந்தார். அதே இடத்தில் யானைகளின் கால் தடங்கள் கண்டறியப்பட்டது.

இதனால் காட்டு யானை தாக்கி ராமமூர்த்தி இறந்திருக்கலாம் என வனத்துறையினர் கூறியுள்ளனர். அந்த பகுதியில் யானைகளை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.