குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் சவுகான் என்ற ஆசிரியர் தனியார் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதில் படித்த மாணவர் ஒருவர் இரண்டு நாட்களாக டியூஷனுக்கு செல்லவில்லை. அதன் பின் வழக்கம்போல டிசம்பர் 13, 2019 ஆம் ஆண்டு மாணவர் வகுப்பிற்கு சென்றுள்ளார்.
அன்று மாலை ஆசிரியர் சவுகான் அவர் தந்தையை பயிற்சி மையத்துக்கு ஒரு தேர்வு படிவத்தை கொண்டு வர ஏற்கனவே கூறியிருந்தார். மாணவனின் பெற்றோர்கள் பயிற்சி மையத்திற்குள் செல்லும்போது யாரோ ஒருவரை அடிப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது. வேகமாக வகுப்பறைக்குள் சென்று பார்த்த போது சவுகான் மாணவனின் கன்னத்தில் வேகமாக பல முறை அறைவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2 நாட்களாக வகுப்புகளை தவற விட்டதால் முக்கியமான பாடங்கள் கவனிக்க முடியாமல் போனதாக தண்டித்ததாக ஆசிரியர் கூறியுள்ளார். இதனிடையே ஆசிரியர் சவுகான் வேகமாக அடித்ததில் மாணவரின் காது கிழிந்து ரத்தம் வந்துள்ளது. உடனே மாணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனை அடுத்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் படி, காவல்துறையினர் ஆசிரியர் சவுக்கானை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை கடந்த வியாழக்கிழமை அன்று கே.எம்.எஸ்.சி நீதிமன்றத்தில் நடந்தது.
இப்போது ஆசிரியர் சவுகான் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனையும் ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
