மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை கிழக்கு புறநகர் பகுதியை சேர்ந்த முகமது சோஹைல் ஹசன் (43). இவர் பிட்புல் நாயின் உரிமையாளர். இவர் சம்பவ நாளன்று தனது பிட்புல் நாயை 11 வயது சிறுவன் ஒருவன் மீது கடிக்க விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்த வீடியோவில், 11 வயது ஹம்சா என்ற சிறுவன் ஒரு ஆட்டோ ரிக்ஷாவுக்குள் விளையாடு கொண்டிருந்தபோது, அந்த ஆட்டோவின் உரிமையாளர் முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டு குழந்தையை பயமுறுத்தும் வகையில் தனது நாயின் பயிற்சி அவிழ்த்துவிட்டு கடிக்க வைத்துள்ளார்.

அதனால் பயந்த சிறுவன் அலறியுள்ளார் இருப்பினும் நாயை பிடித்து கட்டாமல் மீண்டும் பயமுறுத்தும் வகையில் நாயை சிறுவன் மீது பாய வைத்துள்ளார். அந்த பிட்புல் நாய் சிறுவனின் ஆடைகளை கிழித்து அவரை கடிக்க அவர் மீது பாய்ந்து உள்ளது.

அதனால் பயந்த சிறுவன் தப்பிப்பதற்காக முயற்சி செய்துள்ளார். இருந்தும் நாய் அந்த சிறுவனை கடித்துள்ளது. ஆனால் நாயின் உரிமையாளர் சிரித்துக்கொண்டே இருந்துள்ளார். பிறகு ஆட்டோவில் இருந்து தப்பித்து ஓடிய சிறுவர் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இது குறித்து அறிந்த சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நாயின் உரிமையாளரான முகமது சோஹைலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.