
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, இஸ்லாமியருக்கு செஞ்சது எல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தான். அதில் ஒரு சிலவற்றை இந்த நேரத்திலே குறிப்பிட விரும்புகிறேன். ரமலான் நோம்புக்கு ஆண்டு தோறும் சுமார் 5, 400 டன் அரிசி வழங்கியதும் அண்ணா திமுக ஆட்சியில் தான்.
அதே போல ஹெச் பயணம் மேற்கொள்ளுவதற்கு மத்திய அரசு கொடுத்த 6 கோடி ரூபாய் நிறுத்தப்பட்டது. அதை உயர்த்தி 8 கோடியா வழங்குனதும் அண்ணா திமுக அரசாங்கம் தான். அதே போல H பயணம் மேற்கொள்கின்றவர்களுக்கு சென்னையிலே தங்கி செல்வதற்கு H இல்லம் கட்டுவதற்கு உண்டான நடவடிக்கை எடுத்ததும் அண்ணா திமுக அரசு.
உலாமாக்களுக்கு பென்ஷன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்த அண்ணா திமுக அரசு. நாகுர் தர்க்கா குலக்கரையை சீர் செய்ததும் அண்ணா திமுக அரசு. இப்படி பல திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியது அண்ணா திமுக அரசு என்பதை இந்நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன் .
இஸ்லாமியர்களுக்கு நாங்கள் தான் பாதுகாப்பு என்று முதலமைச்சர் சொல்லுகிறார். பாதுகாப்பு இருந்தால் நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஏன் எரிச்சல் படுகிறார்? எங்கள் மீது ஏன் கோவப்படுகிறார்? இஸ்லாமிய பெருமக்கள் எங்களை சந்தித்து, பல ஆண்டுகளாக 36 சிறைவாசிகள் சிறையிலே வாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிபட்டவர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும். அதை அண்ணா திமுக சார்பாக சட்டமன்றத்திலே கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டிருந்தார்கள்.
அதன் அடிப்படையில் தான் நாங்க பேசுனோம். ஆனால் இது சம்மந்தமாக பேசுவதை விட்டுவிட்டு, இஸ்லாமியர்களுக்கு அண்ணா திமுக கட்சியோ, அண்ணா திமுக அரசோ ஒரு துரும்பை கூட செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய காரணத்தில் தான் நாங்கள் பதில் அளிக்க முற்பட்டோம். ஆனால் சட்ட பேரவை தலைவர் அவர்கள் எங்களுக்கு அனுமதி மறுத்துவிட்டார் என தெரிவித்தார்.