திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பத்திரிப்பாளையம் பிரதான சாலையில் மலையனூர் அங்காளம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு,  பெங்களூர் நோக்கி வந்த வந்த காரும்,  கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரானது அப்பளம் போல் நொறுங்கி காரில் பயணம் செய்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் 4 பேர் செங்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலே உயிரிழந்ததாக தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த8 பேரும் உயிரிழந்திருக்கின்றனர்.

செங்கம் காவல்துறையினர் சடலங்கலை கைப்பற்றி விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

படுகாயம் அடைந்த பெண்ணுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி இருந்தேன் என தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்,  7 பேர் உயிரிழந்த்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் எனவும் தெரிவித்தார். மேலும் திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்ணுக்கு 1 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.