மதுராந்தகம் அருகே சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடையில் பிரதமர் மோடி உட்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதற்காகத் தயார் செய்யப்பட்டுள்ள மேடை அலங்காரத்தில், பாமகவின் அங்கீகரிக்கப்பட்ட மாம்பழச் சின்னம் மற்றும் அன்புமணி ராமதாஸின் புகைப்படம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

தற்போது பாமகவில் சின்னம் தொடர்பாக இருவேறு கருத்துக்கள் நிலவி வரும் சூழலில், பொதுக்கூட்ட மேடையிலேயே அன்புமணி ராமதாஸின் படத்துடன் சின்னம் இடம் பெற்றுள்ளது, ராமதாஸ் ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமகவின் ஒருமித்த அடையாளமாக அன்புமணி முன்னிலைப்படுத்தப்படுவதை ராமதாஸ் தரப்பு ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.