பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், முன்னதாக எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அதிமுக அரசை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். “எடப்பாடிக்கு நிர்வாகம் தெரியுமா? நிதிநிலை குறித்து அவருக்கு என்ன அறிவு இருக்கிறது?” என்றெல்லாம் மேடைக்கு மேடை கேள்வி எழுப்பிய காணொளிகள் இப்போது மீண்டும் வைரலாகி வருகின்றன. ஆனால், தற்போது கூட்டணி சூழல் மாறியுள்ள நிலையில், அதிமுகவின் மகளிர் உரிமைத் தொகை ₹2000 அறிவிப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, “சரியான முறையில் வரி வருவாயை நிர்வாகம் செய்தால் இதைச் செயல்படுத்த முடியும்” என்று அதே எடப்பாடியின் திட்டத்திற்குச் சாதகமாகப் பேசியுள்ளார். இந்தத் தலைகீழ் மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
செய்தியாளர் : தமிழ்நாடு கடனில் இருக்குனு சொல்றிங்க
பழனிச்சாமி இலவசம் அறிவித்து இருக்காரே.?சொம்மணி : 😂👇#மானங்கெட்ட_கூட்டணி #NDAfails pic.twitter.com/3jFpzuERrw
— தூய துறவி (@VSK_Talks) January 22, 2026
ஒரே நபர், ஒரே திட்டம் குறித்த நிதி மேலாண்மையை இரண்டு விதமாகப் பேசுவது தற்போதைய தேர்தல் கூட்டணிக்காகத்தான் என்பது அப்பட்டமாகத் தெரிவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். “அப்ப அறிவில்லைன்னு சொன்னீங்க, இப்ப நிர்வாகம் சூப்பர்னு சொல்றீங்களா?” என்று பழைய வீடியோவையும் புதிய வீடியோவையும் எடிட் செய்து நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பதற்கு அன்புமணி அவர்களின் இந்த இருவேறு நிலைப்பாடுகளே சாட்சி என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அனல் பறக்கின்றன.
