பாம்புகளைப் பிடிப்பது என்பது உயிரைப் பணயம் வைக்கும் ஒரு வேலை என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி. ஓடிப் போகாமல் நேருக்கு நேர் மோதிய பாம்பின் இந்தச் செயல் காண்போரை அதிர வைத்துள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு வீட்டின் வெளிச்சுவர் மீது பாம்பு ஒன்று ஊர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த குடும்பத்தினர், அச்சத்தில் பாம்புக் பிடி வீரர் ஒருவரை அழைத்துள்ளனர்.

அந்தப் பாம்பு மிகவும் விஷத்தன்மை கொண்டது எனத் தெரிகிறது. சுவரில் உயரமாக இருந்த அந்தப் பாம்பைப் பிடிக்க, அந்த நபர் ஒரு நாற்காலியின் மீது ஏறி நின்று தனது கருவியால் அதைப் பிடிக்க முயனறார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், அந்தப் பாம்பு அங்கிருந்து தப்பித்து ஓடாமல், நேராக பாம்புக் பிடி வீரரின் மீது ‘ஜம்ப்’ செய்து காற்றில் பறந்து வந்து அவர் உடலில் மோதியது.

சற்றும் எதிர்பாராத அந்த நபர் நிலைகுலைந்து போனார். “பாம்புக்கு வழி காட்டப் போனவருக்கு, பாம்பே வந்து அட்ரஸ் கேட்ட மாதிரி ஆகிப்போச்சு” என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து கலாய்த்தும், எச்சரித்தும் வருகின்றனர்.